கூகுள் மூடிய ''குயிக் ஆபீஸ்”
2014
00:00
Advertisement

பதிவு செய்த நாள்
21ஜூலை2014
00:00
கூகுள் நிறுவனம் இதுவரை அளித்து வந்த Quickoffice அப்ளிகேஷனை மூடிவிட்டது. தன் Google Apps வலைமனையில் இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. கூகுள் ப்ளே மற்றும் அப்ளிகேஷன் ஸ்டோரில் இனி இது கிடைக்காது. தற்போது இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி வருபவர்கள் தொடர்ந்து இதனைப் பயன்படுத்தலாம். ஆனால், புதிய வசதிகள் எதுவும் இணைக்கப்பட மாட்டாது. புதிய பயனாளர்கள் யாரும் இதனை இன்ஸ்டால் செய்திட முடியாது.
குயிக் ஆபீஸ் அப்ளிகேஷனில் உள்ள செயல்பாடுகள் அனைத்தும் கூகுள் டாக்ஸ், ஷீட்ஸ் மற்றும் ஸ்லைட்ஸ் (Google Docs, Sheets and Slides apps) அப்ளிகேஷன்களில் இணைக்கப்பட்டு விட்டதால், இதனை கூகுள் மூடுகிறது.
கடந்த ஓராண்டாகவே குயிக் ஆபீஸ் அனைவருக்கும் இலவசமாகக் கிடைத்து வந்தது. இதனைப் பயன்படுத்தியவர்கள் அனைவரும் இதன் பயன்பாடுகள் குறித்து மிகவும் பாராட்டி வந்தனர். இதனைப் பயன்படுத்தி டாகுமெண்ட்கள், ஸ்ப்ரெட்ஷீட்கள் மற்றும் ஸ்லைட் பிரசன்டேஷன் பைல்களை எடிட் செய்திட முடிந்தது. பயன்படுத்திய பலரும் இதற்கு 5 ஸ்டார் சான்றிதழ் அளித்து வந்தனர்.
ஏறத்தாழ ஒரு கோடி கம்ப்யூட்டர்களில் இது பதியப்பட்டதாக கூகுள் அறிவித்திருந்தது. தேவைப்படுவோர், தனித்தனியாக Google Docs, Google Sheets and Google Slides ஆகியவற்றைப் பதியவும் வசதி தரப்பட்டது.
கூகுள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், இந்த குயிக் ஆபீஸ் அப்ளிகேஷனை அதன் நிறுவனத்திடம் இருந்து வாங்கியது. மைக்ரோசாப்ட் ஆபீஸ் பைல்களை எடிட் செய்திட ஏதுவாக, இதனை இலவசமாக அளித்து வந்தது. தற்போது இதனை மூடிவிட்டது.
பொதுவாக, தனக்கு வேண்டிய அப்ளிகேஷன்களை வாங்குவதும், பின்னர் அதில் உள்ள சில வசதிகளை தன் அப்ளிகேஷன்களில் புகுத்திப் பயன்படுத்தத் தருவதும், பயனாளர்கள் பழகிப் போன பின்னர், அவற்றை எடுத்துவிடுவதும், கூகுள் நிறுவனத்திற்கு வழக்கமான ஒரு செயல்பாடு தான். அதையே இப்போது குயிக் ஆபீஸ் விஷயத்திலும் செய்துள்ளது.

THANK YOU THINAMALAR
0 comments:
Post a Comment