சுட்டு’ கனிந்த மாம்பழம்; கண்டுபிடிப்பது எப்படி?

இந்நிலையில், இயற் கையாக கனிந்த மாம் பழத்துக்கும், கார்பைடு கல்லால் கனியவைக்கப் பட்ட மாம்பழத்துக்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பது எப்படி?கார்பைட் கல் பிரச்னை இன்று இந்திய அளவில் மிகப் பெரிய பிரச்னையாக இருக்கிறது. இதன் மூலம் கனிய வைக்கப்படும் மாம்பழம், வாழைப்பழம் உள்ளிட்ட பழவகைகள் உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிப்பவை.இயற்கையான முறையில் மாம்பழம் கனிவதற்கு 15 நாட்கள் வரை ஆகும். அப்படி கனிந்தால் கூட சில பழங்கள் அழுகிப் போகும்.ஆனால், கார்பைடு கல் மூலம் கனிய வைப்பதற்கு நான்கு நாட்கள் போதும். கார்பைடு கல் வைக்கப் பட்ட தண்ணீர் அதிபயங் கர கொதிநிலையை அடைந்து பழத்தை விரைவில் கனிய வைத்து விடுகிறது.விரைவில் கனிந்தால் நல்லதுதானே என்று நாம் நினைக்கலாம். ஆனால், கனிய வைக்க உதவும் கார்பைடு கல் நச்சுத் தன்மை வாய்ந்தது.
இதை பெரும்பாலும் 'வெல்டிங்' வேலைகளுக்குப் பயன்படுத்துவர். தண்ணீரோடு இது சேரும் போது உருவாகும், 'அசிட் டலைன்' என்ற வேதிப் பொருள், கிரியா ஊக்கியாகச் செயல்பட்டுப் பழங்களைக் கனிய வைக்கிறது.தொழிற்துறையில் மிகச் சாதாரணமாகக் கிடைக் கும் கார்பைடு கல்லில் ஆர்சானிக் மற்றும் பாஸ் பரஸ் இருக்கிறது. இவற்றின் தாக்கம் பழங்களிலும் ஏற்படும். இதனால், கார்பைடு கல்லால் கனிய வைக்கப்பட்ட பழங்களைத் தொடர்ந்து பயன்படுத்துவோருக்கு, மண்டையிடி, தலைசுற்றல், மயக்கம், பெரு மூளையில் உள்ள திசுக்கள் பாதித்தல் போன்ற நோய் கள் உருவாகும்.நான்கே நாட்களில் 120 லிருந்து 180 பழங்கள் வரை கனிய வைப்பதற்கு 100 கிராம் கார்பைடு கல் போதுமானது. இதனால், வியாபாரம் உச்சத்தில் இருக்கும் போது விற் பனை பாதிக்காமல் பார்த் துக் கொள்ள முடியும்.விலையும் கணிசமான அளவில் உயர்ந்திருக்கும். இவற்றால் வியாபாரிகளின் கல்லா நிறைந்து விடும்; வாடிக்கையாளர்களின் கல்லா காலியாகி விடும்.
இயற்கை மற்றும் செயற்கை முறையில் கனிந்த மாம்பழங்களை எப்படிக் கண்டுபிடிப்பது?
* மாம்பழ சீசன் என் பது மே மாதம் தான். அதற்கு முன்பே அதிகளவில் மாம்பழங்கள் வந் தால் அவை கார்பைடு கல்லின் கைங்கரியத்தால் பழுத்தவை என்று ஊகிக்க முடியும்.
* கார்பைடு கல்லால் கனிந்த மாம்பழங்கள், மென்மையாக, வழவழப்பாக இருக்கும். இயற் கையில் கனிந்த மாம்பழங்களில் சுருக்கம் விழுந் திருக்கும்.
* செயற்கை முறையில் கனிந்த மாம்பழங்களில், கொட்டையின் அருகிலுள்ள சதைப் பகுதியில் புளிப்பு இருக்கும். ஆனால், இயற்கையான பழங்களில் எல்லா பக்கமும் இனிப்புச் சுவை நிறைந்திருக்கும்.மகாராஷ்டிர மாநிலத் தில், செயற்கை மாம்பழங் கள் பற்றிய விழிப்புணர் வை மக்களுக்கு ஊட் டும் வகையில், வித்தியாசம் கண்டறிவது எப்படி என்று பிரசாரம் மேற் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. பத்திரிகைகளில், மாம்பழம் வாங்குவது எப்படி என்று விளம்பரம் செய்யப்படும் என, மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகத் தலைவர் அறிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment