Wednesday, 23 July 2014

விஞ்ஞானி!

விஞ்ஞானி! (15)






பதிவு செய்த நாள்

18ஜூலை
2014 
00:00
இங்கிலாந்தில் ஓர் ஏழைக் கருமானின் மகனாகப் பிறந்து படிக்கக்கூட வசதியில்லாமல் 13 வயதிலேயே வேலைக்குப் போகவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது ஒருவருக்கு.
ஆனால், அவர் கண்டுபிடித்த ஒரு சாதனம்தான் பிற்காலத்தில் நவீன உலக அமைப்புக்கே வழி திறந்து விட்டது. அந்த விஞ்ஞானியின் பெயர் மைக்கேல் பாரடே. அவர் கண்டுபிடித்த சாதனம் டைனமோ எனப்படும் மின்னாக்கி.
வீட்டுக்கு வீடு பத்திரிகை போடும் வேலையை மேற்கொண்ட பாரடே, பின்னர் பைண்டிங் வேலையில் சேர்ந்து பழகிக் கொண்டார். அப்போது பல்வேறு அறிவியல் நூல்களைப் படிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. தாம் படிக்கும் நூல்களில் உள்ள பல முக்கிய விஷயங்களை அவர் குறிப்பெடுத்துக் கொண்டார்.
அதன் பயனாக அறிவியல் விஷயங்களில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. அறிவியல் சொற்பொழிவு எங்கே நடந்தாலும் அங்கெல்லாம் தவறாமல் சென்று அறிவியல் மேதைகளின் பேச்சைக் குறிப்பெடுத்து வைத்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டார்.
இவ்வாறு அவர் கேட்ட சொற்பொழிவுகளில் குறிப்பிடத்தக்கது அக்காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த விஞ்ஞானி ஹம்ப்ரி டேவியின் சொற்பொழிவு. அவருடைய சொற்பொழிவுகளை எல்லாம் வரி விடாமல் குறிப் பெடுத்து, எழுதித் தொகுத்து, பைண்ட் செய்து ஒருநாள் அவரிடமே காட்டினார் பாரடே. அவருடைய ஆர்வத்தையும், முயற்சி யையும் கண்டு வியந்த ஹம்ப்ரி டேவி தாம் பணியாற்றி வந்த ராயல் விஞ்ஞானக் கழகத்திலேயே அவருக்கும் ஒரு வேலையை வாங்கிக் கொடுத்தார்.
அந்த வேலையைச் செய்து கொண்டிருந்த போதே ஓய்வு நேரத்தில் சிறுசிறு பரிசோதனை செய்த பாரடே, அத்தகைய சோதனைகளின் விவரங்களையும் முடிவுகளையும் அழகாகவும், விவரமாகவும் எழுதி பைண்ட் செய்து வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்தத் தொகுப்பையும் ஒருநாள் ஹம்ப்ரிடேவியிடம் கொண்டு போய்க் காட்டினார் பாரடே.
அவற்றையெல்லாம் கவனமாகப் பரிசீலித்த டேவி, பாரடேயின் திறமையை முழுமையாகப் புரிந்து கொண்டு, அவரைத் தம்முடைய ஆய்வுக் கூட உதவியாளராகவே நியமித்துக் கொண்டார்.
அன்று முதல் டேவி ஆசிரியராகவும், பாரடே மாணவராகவும் மாறினர். டேவி செய்ய வேண்டிய பல்வேறு சோதனைகளை பாரடேயே செய்யத் தொடங்கினார். பாரடேயின் சோதனை முடிவுகளைக் கொண்டே ஹம்ப்ரி டேவி பல சாதனைகளை நிகழ்த்தி பெயரும் புகழும் பெற்றார். பாரடே திரைக்குப் பின்னால் இருந்து எல்லாச் சோதனைகளையும் செய்து தன் குருவுக்கு உதவினார்.
1813ம் ஆண்டில் ஹம்ப்ரி டேவி பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றார். பாரடேயும் அவரோடு சென்றார். உலகப் புகழ் பெற்ற பல விஞ்ஞானிகளைச் சந்திக்கும் வாய்ப்பு அப்போது அவருக்குக் கிடைத்தது.
நாடு திரும்பியதும் ராயல் விஞ்ஞானக் கழகத்தில் அவர் கடுமையாகப் பணியாற்ற நேரிட்டது. 1865ம் ஆண்டில் பென்ஸீன் என்ற கார்பன் சேர்மத்தைக் கண்டுபிடித்தார் பாரடே. ஆனால், அந்தப் பெருமை முழுவதும் டேவிக்கே போய் சேர்ந்தது. இப்படி பல பெருமைகளைத் தன் குரு நாதருக்குப் பெற்றுக் கொடுத்த பாரடேயை, அந்த குருநாதரே கடுமையாக எதிர்த்து நிற்கும் நிலையும் ஏற்பட்டது. 
ஆயினும் அதனால், ஹம்ப்ரி டேவி எள்ளளவும் பெருமையடையவில்லை. மைக்கேல் பாரடே தான் மேலும் மேலும் புகழடைந்தார். இவ்வாறு பாரடேயின் வாழ்க்கையில் பல சுவையான நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.
***

0 comments:

Post a Comment