Friday, 25 July 2014

காமன்வெல்த் கோலாகலம்: இந்திய கொடி ஏந்தி வந்தார் விஜய்குமார்




துவங்கியது காமன்வெல்த் கோலாகலம்: இந்திய கொடி ஏந்தி வந்தார் விஜய்குமார்






vijay kumar, shooting
 
கிளாஸ்கோ: ஸ்காட்லாந்தில் 20வது காமன்வெல்த் திருவிழா கோலாகலமாக துவங்கியது. இங்கிலாந்தின் எலிசபெத் ராணி துவக்கி வைத்தார். இந்திய அணிக்கு தலைமை ஏற்ற விஜய்குமார், இந்திய மூவர்ணக் கொடி ஏந்தி வந்தார்.
ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுக்கு அடுத்து பெரிய போட்டி காமன்வெல்த். ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 20வது காமன்வெல்த் போட்டியின் துவக்க விழாவில் 2000 நடன கலைஞர்கள் பங்கேற்றனர்.
பிரபல பாடகர் மார்க் ரென்டன் பாடிய ‘வெல்கம் ஸ்காட்லாந்து, வெல்கம் கிளாஸ்கோ’ பாடலுடன் நிகழ்ச்சி செல்டிக் பார்க் மைதானத்தில் துவங்கியது. கிராமி விருது வென்ற பாடகர் ராடு ஸ்டீவர்ட், ஸ்காட்லாந்து பாடகி சூசன் பாய்ல் பாடினர்.
இங்கிலாந்தின் எலிசபெத் ராணி, மைதானத்துக்கு காரில் வந்தார். அப்போது மேலே 9 ‘ஜெட்’ விமானங்கள் சிகப்பு, வெள்ளை மற்றும் நீல நிற புகையை வெளியேற்றியபடி சென்றன. பிரிட்டனின் தேசிய கீதம் பாடப்பட்டது.
குட்டி விமானத்தில் பறந்து வந்த காமன்வெல்த் ஜோதி, அப்படியே கிளைடு நதியில் இறங்கியது. இதிலிருந்து, ஸ்காட்லாந்து சைக்கிளிங் வீரர் மார்க், ஜோதியை ஏந்தி வந்தார்.
அடுத்து ‘யுனிசெப்’ துாதர் சச்சினின் வீடியோ ஒளிபரப்புக்குப் பின், போட்டியில் பங்கேற்கும் 71 நாடுகளின் 4,500 விளையாட்டு நட்சத்திரங்கள், ஆசியா, ஓசியானா, ஐரோப்பா, ஆப்ரிக்கா என, கண்டங்களின் அடிப்படையில் அணிவகுப்பில் பங்கேற்றனர்.
2010 போட்டியை நடத்திய நாடு என்ற அடிப்படையில் இந்தியா முதலில் வந்தது. லண்டன் (2012) ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்ற விஜய்குமார், மூவர்ணக் கொடியை ஏந்தி வர, மற்ற வீரர்கள் பின் தொடர்ந்தனர்.
முடிவில், காமன்வெல்த் கொடி ஏற்றப்பட்டது. இதன்பின், காமன்வெல்த் தலைவரான மலேசிய இளவரசர் இம்ரானிடம், ஜோதி தரப்பட்டது. இதில் இருந்து எடுத்த செய்தியை வாசித்து, போட்டியை ராணி துவக்கி வைத்தார். இதன் பின் வண்ணமயமான வாணவேடிக்கைகள் கண்மைக் கவர்ந்தன.
தடுமாறிய இளவரசர்
துவக்கவிழாவில் காமன்வெல்த் பேடனில், எலிசபெத் ராணி செய்தி வைக்கப்பட்டு இருந்தது. இதை எடுக்க முயன்ற காமன்வெல்த் கூட்டமைப்பு தலைவரான மலேசிய இளவரசர் இம்ரான் தடுமாறினார்.
இவருக்கு பிரபல சைக்கிளிங் வீரர் சர் கிரிஸ் ஹாய் உதவிய போதும், பேடனை திறக்க முடியவில்லை. உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் இதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். கடைசியில் ஒருவழியாக இம்ரான் திறந்ததும், ராணி உட்பட அனைவரும் சிரித்தனர். 
போல்ட் வரவில்லை
துவக்கவிழா அணிவகுப்பில் ஜமைக்கா அணியினருடன், நட்சத்திர வீரர் உசைன் போல்ட் வராதது ஏமாற்றமாக இருந்தது.
* அணிவகுப்பில் வந்த 71 நாடுகளின் வீரர், வீராங்கனைகள், மைதானத்தில் உட்கார வைக்கப்பட்டு இருந்தது வித்தியாசமாக இருந்தது.

0 comments:

Post a Comment